×

முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் பராமரிப்பு கேரளா அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. மழைக்காலங்களில் தொடர்ச்சியாகவும், மற்ற நேரங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் அணையை மேற்பார்வை குழுவானது தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

அணையில் தொடர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பராமரிப்பு பணிகளுக்கான கருவிகளையும், பொருள்களையும் வள்ளக்கடவு சாலை வழியாக அணைக்கு கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்க கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் படி பேபி அணையில் தமிழ்நாடு அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரளா அரசு தமிழகத்துக்கு உரிய அனுமதிகளை வழங்க உத்தரவிட வேண்டும்.

ஒவ்வொரு பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்வதற்கான அனுமதி வழங்க கேரளா ஐந்து மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை தாமதம் செய்கிறது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக்கோரும் போது கேரள அரசு தாமதம் செய்கிறது. அதுகுறித்த பட்டியலும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் பராமரிப்பு கேரளா அரசுக்கு உத்தரவிட தமிழ்நாடு அரசு மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu govt ,Mullaip Periyar dam ,Kerala ,Supreme Court ,New Delhi ,Tamil Nadu government ,Mullai Periyar dam ,Kerala Government ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...